LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் குடும்பஸ்தர் ஒருவர் 30ம் திகதிஜ அன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் கோணேஸ்வரன் (வயது 66) என்பவரை பார் உயிர்மாய்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபருக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் மனவிரக்தியால் தவறான முடிவெடுத்து அன்றையதினம் தூக்கில் தொங்கி உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.