LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டததில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

Share

கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்பிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிப்பு!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாட்டை 2026 தை 24 மற்று 25ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் அதற்கு முன்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் 225 பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்குமான தெரிவுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் 27ம் திகதி சனிக்கிழமையன்று , யாழ். மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் கச்சேரியடியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.அதில் பாராளுமன்ற உறுப்பினராகிய செல்வம் அடைக்கலநாதனும் கலந்து கொண்டார். எனினும் அவருக்கு மேற்படி கூட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அன்றை செயற்குழு கூட்டத்தில் யாழ். மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களாக 45 பேர் தெரிவாகினர்.

கட்சியின் பிரதான பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையவர்களுக்கு வழிவிடும் வகையில் 12 வது மாநாடு அமையவுள்ளதாக ரெலோ கட்சி சார்பாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.