LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் நோயின் தாக்கம் தாங்க முடியாத முதியவர் உயிர்மாய்ப்பு!

Share

பு.கஜிந்தன்

யாழில் நோயின் வீரியம் தாங்கமுடியாத முதியவர் ஒருவர் 3ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். சுதுமலை தெற்கு, சாவல்கட்டு பகுதியை சேர்ந்த இராசா அழகரத்தினம் (வயது 73) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல் இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கில் தொடங்கியுள்ளார்.

அவரை மீட்ட உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.