LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் மழையால் இரண்டு குடும்பங்கள் பாதிப்பு!

Share

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/409 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும், ஜே/400 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு வீடு பகுதியளவிலும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.