LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு!

Share

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 22 கிலோகிராம் கேரள கஞ்சா பொலிஸாரினால் 10-06-2024 அன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 10 பொதிகளில் 22 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கைப்பற்ற கஞ்சாவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.