LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றம், காணி விடுவிப்பு குறித்து அரசாங்க அதிபருடன் இராணுவத் தரப்பு கலந்துரையாடல்!

Share

யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக 27.01.2026 அன்று புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபனை 3ம் திகதி அன்றையதினம் செவ்வாய்க்கிழமை (03.02.2026) காலை 09.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு மற்றும் டித்வா அனர்த்தத்தின் பாதிப்புக்கள் தொடர்பாகவும் அரசாங்க அதிபருடன் விரிவாக கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த அதிகாரிகளான மேஜர் ஜெனரல் ராசிக் மற்றும் கேணல் நிஷங்க ஆகியோரும் பங்குபற்றினார்கள்.

மேலும், அரசாங்க அதிபருடனான சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி ஆகியோரும் உடனிருந்தார்கள்.