LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் வீதி விளக்கு கம்பத்தில் திருத்தங்கள் செய்துகொண்டிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி படுகாயம்!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் வீதி மின் விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் சந்தையை அண்மித்த பகுதியில் 1ம் திகதி அன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை, வீதி மின்விளக்குகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கியுள்ளது.

இதன்போது, மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த ஊழியரை சக ஊழியர்கள் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.