LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் . காரைநகர் கசூரினா கடற்கரைப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 20ம் திகதி இரவு பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

Share

கடந்த 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமைத இரவு 9 மணி அளவில் காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சவுக்கு மரங்கள், பனை மரங்கள் புற்கள் ஆகியவற்றில் தீ பரவியுள்ளது.

இதனை அறிந்த பிரதேச மக்கள் பொலிசாருக்கும் கடற்படையினருக்கும் தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற பொலிசாரும் கடற்படையினரும் பிரதேச சபையினரும் பவுசர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்

அதிகாலை 2 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன்போது பெருமளவான மரங்கள் தீயினால் எரிந்து நாசமாகியது. தீப்பரவலுக்கான காரணம் அறியப்படவில்லை. ஊர்காவற்றுறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.