LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைவஸ்த்தடன் 22 வயது இளைஞரன் கைது!

Share

பு.கஜிந்தன்

24ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 22 வயது இளைஞரன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.