யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி கடற்கரை பகுதி பெருமளவிலான கஞ்சா பொதிகள் மீட்பு!
Share
மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்கரை பகுதியில் இருந்து பெருமளவிலான கேரள கஞ்சா இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா பொதிகள் கைமாற்றுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கடற்படையினரால் இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் 86.7 கிலோ எடையுடையவை என கூறப்படுகிறது. கடற்படையினர் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




















