LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Share

பு.கஜிந்தன்

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம் டிசம்பர் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட பிரிவு மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி 03-12-2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் 4 ம் திகதி மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் உசைன், சந்தேக நபர்கள் 19 பேரையும் டிசம்பர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.