LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண மாவட்டத்தின். வடமராட்சி கிழக்கு கிராமங்களில் யானைகளின் நடமாட்டம் எவ்வாறு வந்தது?!

Share

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, சுண்டிகுளம் பகுதியில் 19ம் திகதி வியாழக்கிழமை இரவு 5 யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணாப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன. குறித்த சம்பவம் அப்பகுதியில் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யானைகளை வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கி விடப்பாட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

வடமராட்சி கிழக்கில் சுண்டிகுளத்திலிருந்து வெற்றிலைக்கேணி வரை வன ஜீவ
ராசிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அப் பிரதேசங்களில் இதுவரை யானைகள் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் குறித்த யானைகள் வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கிவிடப்பாட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு ஒரு யானை தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து இறக்கி விடப்பட்ட நிலையில் அதன் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணமடைந்ததமை குறிப்பிடத்தக்கது.