LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப் பணிப்பாளர் நியமனம்

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு புதிய சமுர்த்திப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட திரு.பொன்னம்பலம் ஸ்ரீவர்ணன் அவர்கள் 30ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் (30.10.2025) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.

இவர் முன்னர் வடக்கு மாகாண சபையின் சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும் ,வடக்கு மாகாண பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் கடமையாற்றி அன்றையதினம் (30.10.2025) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.