LOADING

Type to search

சினிமா

“யூத்” பட தலைப்பு குறித்து கென் கருணாஸ் விளக்கம்

Share

`அசுரன்’, `விடுதலை 2′ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கென் கருணாஸ். நடிப்பு மட்டுமின்றி சில திரைப்படங்களில் கென் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் கென் கருணாஸ் “யூத்” திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகிறது. `யூத்’ திரைப்படத்தை பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம், பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது. யூத் திரைப்படத்தின் வெளியீடை ஒட்டி இயக்குநரும், நடிகருமான கென் கருணாஸ் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் பட தலைப்பை தேர்வு செய்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர், “படத்தின் தலைப்புக்கு பெரும்பாலானோர் வாழ்த்து தெரிவித்தனர். எனினும், எனது தந்தை கருணாஸ் மற்றும் நடிகர் விஜய் என இருவரின் அரசியல் முற்றிலும் முரணாக இருக்கிறதே என்று எனது தாய் கேட்டார். எனக்கு இந்தப் படத்தின் தலைப்பு கிடைத்தது சிறப்பான விஷயம். மேலும், இந்த தலைப்பை வாங்கியது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட அழுத்தம் தான். இந்த தலைப்புக்கு நியாயம் செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. படம் வெளியாகும் போது பட தலைப்பு குறித்து அப்படி யோசிக்க மாட்டார்கள்,” என்றார்.