LOADING

Type to search

சினிமா

ரத்னகுமாரின் “29” படம் விரைவில் வெளியீடு

Share

2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார். இதன்பின் இவர் ‘ஆடை’, ‘குலுகுலு’ போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ஜி-ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். இதில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனாஷ், பிரேம்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில், ரத்னகுமாரின் ‘29’ படத்தின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.