ரஷியா நோக்கி அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பிய டிரம்ப்
Share
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதிபரானது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகள் மீது இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளார். இதனிடையே, 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வரும் உக்ரைன் – ரஷியா போரை நிறுத்த டிரம்ப் முயற்சித்தார். ஆனால், முயற்சி தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த டிரம்ப், ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளார். மேலும், 50 நாட்களுக்குள் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் ரஷியா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரியின் மிரட்டலை தொடர்ந்து ரஷியா நோக்கி அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவின் முட்டாள்தனமான , ஆத்திரமூட்டும் மிரட்டல்கள் வெறொரும் மிரட்டல்களாக மட்டும் இல்லையென்றால் அதற்கு பதிலடியாக அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களை ரஷியா நோக்கி நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன். வார்த்தைகள் மிகவும் முக்கியம். அந்த வார்த்தைகள் சில சமயங்களில் காரணமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். டிமிட்ரியின் தற்போதைய வார்த்தைகள் அதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்ததாது என நம்புகிறேன் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரஷியாவை நோக்கி நிலைநிறுத்த அணு ஆயுதம் தாங்கிய 2 அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்கள் புறப்பட்டுள்ளன. அதேவேளை, டொனால்டு டிரம்பின் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் நிலைநிறுத்தல் தொடர்பான மிரட்டலுக்கு ரஷியாவும் பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக ரஷிய எம்.பி. விக்டர் வடலொட்ஸ்கெ கூறுகையில், உலக கடல்களில் அணு ஆயுதம் தாங்கிய அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களை விட அணு ஆயுதம் தாங்கிய ரஷிய நீர்மூழ்கி கப்பல்கள் அதிகம். டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு ரஷியா நோக்கி நிலைநிறுத்த உத்தரவிட்ட பகுதி அவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்க அதிபர் உத்தரவிட்ட அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களும் எங்கு உள்ளன. அதன் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு தெரியும். ஆகையால், டிரம்ப்பின் கருத்துக்கு ரஷியாவிடமிருந்து அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் நிலைநிறுத்தல் ரீதியில் பதிலடி கொடுக்கும் அவசியமில்லை’ என்றார்.




















