ரஷிய எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதியை நம்பியிருக்கவில்லை – மத்திய அரசு விளக்கம்
Share
ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பாதையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போட்டித்தன்மை வாய்ந்த விலைகளை வழங்கும் எந்தவொரு இத்தில் இருந்தும் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி விநியோககத்தில் தடைகள் இருந்தபோதிலும், பாதுகாப்பாக உள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. “ஹார்முஸ் பாதையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் போதிலும், இந்தியாவின் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாகவும் நிலையானதாகவும் உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் ஆதாரங்களை 27 நாடுகளில் இருந்து 40 நாடுகளாக பன்முகப்படுத்தியுள்ளது, இது பல மாற்று விநியோக வழிகளை உறுதி செய்கிறது. தேசிய நலனுக்காக, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் மலிவு விலையில் கிடைக்கும் எங்கிருந்து எண்ணெய் வாங்குகிறது. ரஷிய எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா எந்த நாட்டின் அனுமதியையும் ஒருபோதும் நம்பி இருக்கவில்லை. இந்தியா பிப்ரவரி 2026 இல் கூட ரஷிய எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது, மேலும் ரஷியா இன்னும் இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக உள்ளது. ரஷியா-உக்ரைன் போரின் மூன்று ஆண்டுகளாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆட்சேபனைகளை மீறி இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கிக் கொண்டே இருந்தது. 2022-க்கு பிறகு தள்ளுபடி விலைகள் மற்றும் சுத்திகரிப்பு தேவை காரணமாக இறக்குமதி கணிசமாக அதிகரித்தது,” என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்கா வழங்கிய தற்காலிக விலக்கைத் தொடர்ந்து, ரஷ்யாவின் எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்வதாகவும் இந்தியா சனிக்கிழமை உறுதிப்படுத்தியது. மத்திய கிழக்கில் போர் காரணமாக இந்த விலக்கு அளிக்கப்பட்டது. அத்தகைய கொள்முதல்களை செய்ய மத்திய அரசு எந்த நாட்டிடம் இருந்தும் அனுமதி பெற தேவையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.




















