ரொறன்ரொ பல்கலைக் கழக தமிழ் இருக்கை’ நிறுவ நிதி வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு சென்னையில் நேரடியாக நன்றி தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன்
Share
கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் 12ம் திகதி திங்கட்கிழமையும் சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்திய பிரமாண்டமான ‘அயலகத் தமிழர் விழா’ நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் வகையில் கனடாவிலிருந்து எமது பிக்கரிங் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார்.
மேற்படி இரண்டு நாட்களும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

அந்த மேடையில் எமது பிக்கரிங் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்கள் ஆற்றிய உரையானது பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாகவும் சபையோரின் பாராட்டுக்களைப் பெற்றதுமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல விடங்களை உள்ளடக்கி உரையாற்றிய அவர் எமது ஈழத்தமிழ் மக்கள் மற்றும் தமிழ்க் கனடியர்கள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கி உரையாற்றினார். ரொறன்ரொ பல்கலைக் கழகத்தில் ‘தமிழ் இருக்கை’ அமைவதற்கு நிதி உதவி வழங்கிய தமிழக முதலமைச்சருக்கும் அவர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன் எமது தாயகத்திலிருந்து அடைக்கலம் தேடிச் சென்ற தமிழ் மக்களை தமிழ்நாட்டில் தங்கவைத்து பராமரித்து அவர்கள் பிள்ளைகள் உயர் கல்வி பெறவும் வழி வகுத்தமைக்காகவும் நன்றி தெரிவித்தார்.

இவ்வாறு சென்னை ‘அயலகத் தமிழர் விழா’ விழாவில் நேரடியாகப் பாராட்டுத் தெரிவித்த எமது பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்களைச் சந்தித்த சில அமைச்சர்களும் அவருக்கு நன்றி தெரிவிததார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே காணப்படும் படங்கள் சென்னை ‘அயலகத் தமிழர் விழா’ மண்ட்பத்தில் எடுக்கப்பெற்றவையாகும்.




















