“லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” படத்தின் பதாகை வெளியிடும் வெற்றிமாறன்
Share
அனகனகா ஒ அதிதி’, `கொன்றால் பாவம்’, `மாருதிநகர் காவல்நிலையம்’ போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன். இவர் தற்போது, உண்மை சம்பவமான லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாரண், இளவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படம் ஒரு சாதாரண குற்றக் கதை அல்ல. இது தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்கிறது” என்று இயக்குனர் தயாள் பத்மநாபன் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் பூஜையுடன் துவங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் முதல்காட்சி பதாகை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு காலை 11.11 மணியளவில் இந்த படத்தின் முதல்காட்சி பதாகையை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட உள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.




















