LOADING

Type to search

சினிமா

லெஜண்ட் சரவணனின் “லீடர்” படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியீடு

Share

தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது “மரகத மலை.” அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கி இருக்கிறார். மேலும், எல்.ஜி மூவிஸ்நிறுவனத்துடன் இணைந்து எஸ். லதா இந்தப் படத்தை தயாரித்தும் இருக்கிறார். இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மரகதமலை 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை. புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும். எல்.வி. முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி. சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடன காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இந்தப் படத்திற்கு பா.விஜய், கே.டி. சேஷா பாடல்களை எழுதியுள்ளனர். கே. தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை ஏப்ரல் 3-ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.