லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 15 பேர் உயிரிழப்பு
Share
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. ஈரானும் பதிலுக்கு இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்த சூழலில், ஈரானுக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு பதிலடி தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனால், லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுபற்றி லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், 15 பேர் பலியாகி உள்ளனர். 15 பேர் காயமடைந்தனர்.




















