LOADING

Type to search

உலக அரசியல்

வங்காளதேசத்தில் விமான விபத்து – 31 பேர் உயிரிழப்பு

Share

வங்காளதேசத்தில் விமானப்படைக்குச் சொந்தமான எப்.7 பி.ஜி.ஐ. விமானம் நேற்று பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்துக்கு உள்ளானது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து டாக்கா அருகே உத்தாரா பகுதியில் பள்ளி மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த விமானி மற்றும் மாணவர்கள் 20 பேர் பலியானார்கள். விபத்தில் இறந்த விமானியின் பெயர் லெப்டினன்ட் முகமது டோகிர் இஸ்லாம் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து உள்ளது.  காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்தது. பலியானவர்களில் 25 பேர் மாணவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.