LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியை ஆய்வு செய்யாமலேயே கடந்து சென்றுள்ளார். செம்மணி மனித புதைகுழி தொடர்பாக மறைக்க எதுவும் இல்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க செப்டெம்பர் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார். செம்மணி மனித புதைகுழி தொடர்பாக இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 41ஆவது நாளான 2ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றைய தினம் நான்கு எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில், கண்டறியப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை மொத்தமாக இதுவரை 206 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை ஆரம்பித்து வைக்க யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க செம்மணி மனித புதைகுழி குறித்து முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். “செம்மணி மனித புதைகுழி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து முறையான விசாரணையை ஆரம்பித்துள்ளோம் எங்களிடம் மறைக்க எதுவுமில்லை.” கசப்பான கடந்த காலத்தை ஏன் நினைவில் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேசிய ஜனாதிபதி, யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு செல்லும் வழியில் செம்மணி மனித புதைகுழியை ஆயு்வு செய்யாமலேயே கடந்து செல்வதை ஊடகவியலாளர்கள் காணொளி பதிவு செய்திருந்தனர். தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையில் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் அகழ்வாய்வுகள் முதல் முறையாக 2025 மே 15 அன்று ஆரம்பமானது. இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னார் சதொச மனிதப் புதைகுழி ஆகும், இதில் 28 சிறுவர்கள் உள்ளிட்ட 376 பேரின் மனித மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

Share

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ம் ஆண்டு பகிடிவதை செய்துள்ள தையடுத்து பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து 9 மாணவன்கள் 7 மாணவிகள் உட்பட 16 பேரை 3ம் திகதி; புதன்கிழமை மாலை சிஜடி யினர் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் 3 ம் ஆண்டில் தொழில்நுபட்ப பீடத்தில் கல்விகற்றுவரும் மாணவ குழு ஒன்று முதலாம் ஆண்டு மாணவர்கள் மாணவிகள் மீது கடந்த 2023 ம் ஆண்டு பகிடிவதை மேற்கொண்டனர்.

இதனையடுத்து பகிடிவதையால் பாதிக்கப்பட்ட ஹிம்புட்டான அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் தன்மீது கொடூரமாக தாக்கப்பட்டு பகிடிவதை மேற்கொண்டதாகவும் ஏனைய முதலாம் ஆண்டு மாணவிகளை பகிடிவதை செய்து திட்டியதாகவும் 3ம் ஆண்டு மாணவர்குழுவுக்கு எதிராக 26.10.2023 ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இந்த முறைப்பாட்டையடுத்து குற்ற புலனாய்வு பிரிவினர் குழு ஒன்று சம்பவதினமான 3ம் திகதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு 16 மாணவர்களையும் அழைத்து அங்கு வைத்து விசார ணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பெற்ற பின்னர் மாலை 4.45 மணிக்கு 1998 ஆம் ஆண்டு 20 ஆம் எண் கல்வி நிறுவனங்களில் சோதனை மற்றும் பிற வகையான வன்முறைகள் (தடை) சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதில் 9 மாணவன்கள், 7 மாணவிகள் உட்பட 16 பேரையும் ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது தலா ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.