வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மகாகவி பாரதியின் பிறந்தாள் நிகழ்வு!
Share
பு.கஜிந்தன்
மகாகவி பாரதியாரின் 143வது பிறந்தாள் நிகழ்வானது 10ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பாரதியார் சிலையடியில் நடைபெற்றது.
இதன்போது மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தப்பட்டது.
கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுப்பிரமணியன் 1882 டிசம்பர் 11 இல், சென்னை மாகாணத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் (தூத்துக்குடியில்) பிறந்தார்.
பெண் விடுதலை, சாதிய எதிர்ப்பு, சமத்துவம் என்பவற்றை வலியுறுத்தி இவர் கடுமையாக போராடினார்.
இவர் வழக்கமாக உணவளிக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் லாவண்யா என்ற யானை, ஒரு நாள் இவர் தேங்காய் வழங்கியபோது, இவரைத் தாக்கியது. இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்த போதிலும், இதன் விளைவாக சில மாதங்களில் இவரது உடல்நிலை மோசமடைந்தது. 1921 செப்டம்பர் 11 அன்று அதிகாலை 1 மணியளவில், பாரதியார் இயற்கை எய்தினார்.
பல மொழிகளில் புலமை பெற்ற பாரதி தமிழ் மொழியின் மீது தீராத பற்றுக் கொண்டிருந்தார். இவரது படைப்புகள் அரசியல், சமூக, ஆன்மீகக் கருப்பொருள்களை உள்ளடக்கியதாக விளங்கின. பாரதி இயற்றிய பாடல்களும், கவிதைகளும் தமிழின் இலக்கியம், இசை மற்றும் அன்றாட வாழ்க்கையில் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.




















