LOADING

Type to search

கனடா அரசியல்

”வரும் செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபையில் கனடியஅரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று எமது பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளதை நாம் வரவேற்போம்!”

Share

ஸ்காபுறோ ரூஜ் பார்க் பாராளுமன்ற உறுப்பினரும் கனடா உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி அறிவிப்பு

இஸ்ரேலிய அரசும் இராணுவமும் பாலஸ்த்தின மக்கள் மீது மேற்கொண்டுவரும் கொடூரமான தாக்குதல்களினால் எங்கள் சமூகத்தில் பலர் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாகவும் தங்கள் உ றவுகள் கொல்லப்படுவது தொடரபாகவும் எமமோடு தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு : உங்கள் குரல்கள் கேட்கப்பட்டுள்ளன என்பதை அறியத்தருகின்றேன்.தொடர்ந்து . பாராளுமன்றத்திலும் அமைச்சரவை மேசையிலும் அமைதி மற்றும் நீதிக்கான உங்கள் அழைப்புகளை நான் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவேன்.

இவ்வாறு ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் கனடாவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் அறிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இந்த செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் கனடாவின் அரசாங்கம் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று எ மது பிரதமர் மார்க் கார்னி அறிவித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, இஸ்ரேலுடன் அமைதி மற்றும் பாதுகாப்பில் இணைந்து வாழும் ஒரு சுயாதீனமானதும் , சாத்தியமானதும் மற்றும் இறையாண்மை கொண்டதுமான பாலஸ்தீன அரசு என்ற இரு-அரசு தீர்வுக்கான கனடாவின் நீண்டகால உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று நாம் நம்பலாம்.

அக்டோபர் 7 தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் இருப்பு ரிமையை அது நிராகரித்தல் உட்பட ஹமாஸ் அமைப்பின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களையும் நாம் கண்டிக்கின்றோம்

காசாவில் மனிதாபிமான பேரழிவைத் தடுக்கவும் உதவிக்கான அணுகலை உறுதி செய்யவும் இஸ்ரேலிய அரசாங்கம் தவறிவிட்டது என்பதையும் நாம் அறிவோம்..

இரு-அரசு தீர்வைப் பாதுகாப்பது என்பது வன்முறையை விட அமைதியைத் தேர்ந்தெடுக்கும் அனைத்து மக்களுடனும் நிற்பதும், நீடித்த அமைதியை நோக்கி அவசரமான, ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுப்பதும் அவசியம் ஆகும்.

இந்த அங்கீகாரம் பாலஸ்தீன ஆணையம் முக்கிய சீர்திருத்தங்களை செயல்படுத்துவதைப் பொறுத்தது: ஜனநாயக ஆட்சி, 2026 இல் சுதந்திரமான தேர்தல்கள் மற்றும் பாலஸ்தீன அரசின் இராணுவமயமாக்கல் தொடர்கின்றது. எனினும் ஹமாஸ் அமைப்பானது உடனடியாக அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும், , மேலும் பாலஸ்தீனத்தின் எதிர்கால நிர்வாகத்தில் எந்தப் பங்கையும் ஹமாஸ் அமைப்பு கொண்டிருக்கக்கூடாது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு கனடியப் பிரதமரின் அறிக்கை தொடர்பாக கருத்துக்களைப் பகிர்ந்துள்ள ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.