LOADING

Type to search

இலங்கை அரசியல்

வறட்சியுடன் கூடிய காலநிலை தீவிரமடைவதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 69113பேர் பாதிப்பு!

Share

பு.கஜிந்தன்

வறட்சியுடன் கூடிய காலநிலை தீவிரமடைவதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை 21714 குடும்பங்களைச் சேர்ந்த 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கூடுதலாக சங்கானை, சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்புகள் உணரப்பட்டுள்ளது.

அந்த வகையில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 15965 குடும்பங்களைச் சேர்ந்த 49160 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 3135 குடும்பங்களைச் சேர்ந்த 11160 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 1028 குடும்பங்களைச் சேர்ந்த 3146 பேரும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 956 குடும்பங்களைச் சேர்ந்த 3067 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போது 6053 குடும்பங்களைச் சேர்ந்த 19704 பேருக்கு குடிநீர் விநியோகத்திற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.