LOADING

Type to search

இலங்கை அரசியல்

வவுனியாவில் 15 வயது சிறுவன் ஒருவனை வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

Share

(21-07-2023)

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் மாவட்ட சமூக பொலிஸ் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக செயல்படும் நபர், குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த நபர் வவுனியா நகரை அண்டிய பாடசாலையில் கல்வி கற்கும் குருமன்காடு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வைத்து வன்கொடுமை செய்ததாக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் நேற்று(20) கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.