LOADING

Type to search

இலங்கை அரசியல்

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிய கொழும்பில் 3 பேர் சிஜடி யினரால் கைது

Share

(கனகராசா சரவணன்;)

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மருதானை, சுண்ணாகம், பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28,35,45 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று சனிக்கிழமை (30) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேகநபர்கள் கடந்த வருடங்களில் எல்ரிரி அமைப்பின் மாவீரர் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருடத்தின் கொண்டாட்டங்கள் எனக் கூறி முகநூல் மற்றும் சமூக வலைத்தள கணக்கின் ஊடாக பகிரந்து பரப்பியுள்ள குற்றச்சாட்டில் இந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது