வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவருக்கு 28 வரை விளக்கமறியல்—
Share
((கனகராசா சரவணன்)
திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் முன் தகாத முறையில் தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட முயன்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு 17ம் திகதி அன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார்.
பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி ஊடாக வீதியால் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பிரயாணியான நெதர்லாந்து பெண் ஒருவரை கடந்த மாதம் 26ம் திகதி திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் இடைமறித்து அவருக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த பெண் அறுகம்பே சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ததையடுத்து குறித்த நபரின் புகைப்படத்தை ஊடகங்கள் ஊடாக பொலிசார் வெளியிட்டு அவர் தொடர்பாக தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து குறித்த நபர் தொடர்பாக நேற்று கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (16) விசாரணையை மேற்கொண்ட திருக்கோவில் பொலிசார் 25 வயதுடையவரும் ஒரு பிள்ளையின் தந்தையும் பொகலந்தலாவையைச் சேர்ந்தவரும் களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேசத்தில் திருமணம் முடித்து கடந்த சில வருடமாக திருக்கோவில் பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வாழ்ந்து வருபவருமான அவர் பற்றிய விபரங்களை பொலிசார் ஆரம்பக்கட்ட விசாரணையில் சேகரிக்கப்பட்டன
இதனையடுத்து அவர் வாடகைக்கு இருந்த வீட்டை முற்றுகையிட்ட போது அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வெளியேறி களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்றபோது அவர் அங்கும் இல்லாது தலைமறைவாகியுள்ள நிலையில் மருதமுனை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைத்துக்கு அருகில் தனது தலையை மொட்டையடித்து தனது தோற்றத்தை மாற்றிக் கொண்ட நிலையில் இருந்தபோது அங்கு வைத்து குறித்த நபரை கைது செய்து பொத்துவில் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.;
இவ்வாறு செய்யப்பட்டவரை 17ம் திகதி அன்று திங்கட்கிழமை (17) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 28 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
.




















