LOADING

Type to search

உலக அரசியல்

ஸ்வீடனில் பயணிகள் நிழற்கூடம் மீது மோதிய பேருந்து – 3 பேர் மரணம்

Share

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்வீடன். இந்நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோக் மாகாணம் ஆஸ்டர்மல்ம் நகரில் நேற்று மாலை பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், அந்த பேருந்து அப்பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது. பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது பேருந்து மோதியது. இந்த கோர சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறை, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விபத்தா? பயங்கரவாத தாக்குதலா? என்பது குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.