LOADING

Type to search

இலங்கை அரசியல்

1391 பேருடன் யாழ்ப்பாணம் வரும் மிகவும் பிரமாண்டமான அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல்!

Share

யாழ்ப்பாணத்திலிருந்து எமது செய்தியாளர் பு.கஜிந்தன்

இந்தியாவில் இருந்து MV Express (Cordelia Cruises) என்ற அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது 15ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார்.

10 தளங்களை கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்த கப்பலானது இந்தியாவிலிருந்து சுமார் 1391 சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்டு அம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக வெள்ளிக்கிழமை காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது. இந்த கப்பலில் சுமார் 584 சிப்பந்திகள் (ஊழியர்கள்) பணி புரிகின்றனர்.

குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது கடந்த 2023ஆம் ஆண்டு 9 தடவைகளும் 2024ஆம் ஆண்டு 6 தடவைகளும் இலங்கைக்கு வந்திருந்தது. இவ்வாறிருக்க இந்த ஆண்டு 15ம் திகதி மற்றும் 22ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் வருகைதரவுள்ளதாக த.பகீரதன் மேலும் தெரிவித்தார்.