LOADING

Type to search

இலங்கை அரசியல்

14-02-2024 இரவு யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் இடம்பெற்ற கோர ரயில் விபத்தில் தந்தையும் 3 மாத குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

Share

அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயில், தண்டவாளத்தை கடக்க முற்பட்ட ஹையேஸ் வாகனத்தை மோதியது. குறித்த விபத்தில் கணவன், மனைவி, 3 மாதங்கள் நிரம்பிய மகள் என மூவர் சிக்கினர்.

இந்நிலையில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்தது. மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.. இந்த விபத்தானது ஒட்டுமொத்த இலங்கையையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனந்தராசா சயந்தன் (வயது: 32), சயந்தன் அக்ஷரா
(வயது – மூன்று மாதங்கள்) ஆகியோர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சயந்தன் பிரியங்கா (வயது 22) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவசர சிகிச்சைக்கு பின், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.