LOADING

Type to search

இலங்கை அரசியல்

27ம் திகதி மாவீரர் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் கடைகளை 2 மணியுடன் மூடும்படி முன்வைக்கப்பட்ட கோரிக்கை?

Share

பு.கஜிந்தன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண . மாநகரசபை உறுப்பினர்களுக்கும், யாழ்ப்பாணம் . வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று 26ம் திகதியன்று இடம்பெற்றது.

எதிர்வரும் 27 திகதி எமது மண்ணுக்காய் மரணித்த வீரர்களின் தினமான மாவீரர் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மாலை 2.00 மணியுடன் பூட்டி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மாவீரர் நிகழ்வில் பங்கு பற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நேரில் சந்தித்து கோரிக்கை எழுத்துமூலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அவர்கள் அது குறித்து சாதகமாக பரிசீலிப்பதாக வாக்குறுதி தந்திருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் இரத்தினம் சதீஸ் தெரிவித்துள்ளார்.