LOADING

Type to search

இலங்கை அரசியல்

37 ஆண்டுகளின் பின்பு தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் கைது.

Share

37 ஆண்டுகளின் பின்பு தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் கைது.

ந.லோகதயாளன்.

போர்க் காலத்தில் உயிரைக் காக்க யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்குத் தப்பிச் சென்வர் 37 ஆண்டு கடந்து நாடு திரும்பியபோது சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச் சாட்டின் கீழ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சின்னையா சிறிலோகநாதன் என்னும் ஏழாலையைச் சேர்ந்த 75 வயது முதியவர் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக நேற்றைய தினம் நாடு திரும்பியபோதே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக உயிரை காக்கும் நோக்கில் லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றபோது 1987 ஆம் ஆண்டு படகு மூலம் தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளார்.

இவ்வாறு தப்பிச் சென்றவர் தமிழகத்தின் திருவண்ணாமலைப் பகுதியில் உள்ள முகாமில்
தங்கி வாழ்ந்து தற்போது ஏழாலையில் வசிக்கும் தனது மகனுடன் முதுமைக் காலத்தில் வாழ்வதற்காக ஐக்கிய நாடுகளின் அகதிகளிற்கான அமைப்பில் (யு.என்.எச்.சி.ஆர்) பதிவு செய்து தாயகம் திரும்பியபோதே 28ம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனால் இனி வரும. காலத்தில் தாயகம் திரும்பும் அகதிகள் கைது செய்யப்படுவார்களா என்ற அச்சம் எழுப்பப்படுகின்றது