LOADING

Type to search

மரண அறிவித்தல்

45ம்நாள் நினைஞ்சலியும், நன்றி நவிலலும் | அமரர். நாகமணி சிவராமன் (அப்பன்)

Share

(ஒய்வு பெற்ற சிவில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை)

ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாயும் அடக்கமாயும்
ஆசைகளை புறக்கணித்து அடுத்தவர்க்கு உதவுவராய்
ஊர்போற்ற வாழ்ந்த உத்தமனார் சிவராமன் ஓய்வெடுக்க
இன்னோர் உலகம் சென்றார் எமை உருகச் செய்தே!
பேரும் புகழும் நிதியும் வேண்டாம்
குடும்பமாய் என் பெருவாழ்வு நிறைவடைந்தால்
போது மென எண்ணியே
யார் யாரோ வெளிநாடு அழைக்க அவற்றையே நிராகரித்து
தாய் மண்ணின் வாசம் நுகர்ந்து நிமலனடி சேர்ந்தாரே!

பதுளையைப்பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் திருநெல்வேலி,வவுனியா ஆகிய இடங்களில் வசித்து வந்தவருமான அமரர். நாகமணி சிவராமன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி. 24-06-2024 செவ்வாய்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், 26-6-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் வீட்டகிரியைகள் நடைபெற்று ஆத்மசாந்திப்பிரார்தனையும், மதியபோசனமும் நடைபெற்றன

அன்னாரின் பிரிவுத்துயரின் உடன் வந்தவர்கள், அன்னாரின் இல்லத்திற்கு வருகை தந்தவர்கள், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்கள், மலர்வளையங்கள் மற்றும் பதாகைகள் வைத்தவர்கள், தொலைபேசியில் அழைத்து அனுதாபங்களைத் தெரிவித்தவர்கள் மற்றும் உணவளித்தவர்கள் இன்னும் பல வழியில் உதவிபுரிந்தவர்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்ப சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: 077 611 4257