கனடாவில் வருடாந்தம் நடைபெற்று வரும் ‘சந்தியாராகம்’ பாடல் போட்டி நிகழ்ச்சியின் இவ்வருட வெற்றியாளர்கள்
Share
தினமும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் சிகிச்சைக்காகச் செல்லும் இலங்கையின் முக்கிய வைத்தியசாலையாகத் திகழும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தொடர்ச்சியாக நிதி உதவிகளை வழங்கி நோயாளர்களின் தேவைகளுக்கு தீர்வு காண வழி சமைக்கும் கனடா வர்த்தகர் கணேசன் சுகுமார் அவர்களுக்கு உலகெங்குமிருந்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
கனடாவில் நீண்ட காலமாக பல்வேறு வர்த்தக முயற்சிகளில் கால் பதித்து நூற்றுக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி வரும் கணேசன் சுகுமார் அவர்கள். கனடாவிலும் பல வைத்தியசாலைகளின் நிதித் தேவைகளின் போது உதவிகள் வழங்கி வருகின்றார் என்பதும் இரத்தம் சுத்திகரிப்பு செய்யும் இயந்திரங்களையும் பல தடவைகள் வழங்கியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலை யில் கடந்த சில வருடங்களாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி மற்றும் வைத்தியர்களின் வேண்டுகோளின் பேரில் கணேசன் சுகுமார் அவர்கள் தொடர்ச்சியாக நிதி உதவிகளை வழங்கியும் நேரடியாக யாழ்ப்பாணம் சென்றும் அவற்றை கையளித்தும் வருகின்றார்.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாண வைத்தியசாலையின் கண்சிகிச்சைப் பிரிவிற்கு 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை வழங்கினார். அதற்கு முன்னர் கடந்த வருடங்களில் இருதய சிகிச்சைப் பிரிவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்ய 50 இலட்சம் ரூபாய்களை வழங்கினார்.
இந்த கையளிப்பு வைபவங்களில் திரு கணேசன் சுகுமார் சார்பாக இளங்கோ இரத்தினசபாபதி அவர்கள் கலந்து கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.