LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னாரில் சாதாரண தர பரீட்சையில் சாதித்த பின்தங்கிய கிராமப் பாடசாலை மாணவர்கள்.

Share

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

(05-10-2024)

மன்னார் கல்வி வலயத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக மன் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை காணப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் தரம் 1 முதல் 10 வரையிலான வகுப்புகள் மாத்திரம் காணப்பட்டது.இதனால் சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புக்களை தெரிவு செய்ய மாணவர்கள் அயல் பாடசாலைகளான நானாட்டான் மற்றும் முருங்கன் பாடசாலைகளுக்கு பஸ்ஸிலும்,துவிச்சக்கர வண்டியிலும் சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று கல்வி கற்று வந்தனர்.

-மடுக்கரை கிராமத்தை சூழ்ந்துள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பெற்றோரின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் வலயக்கல்வி அலுவலகம் கடந்த 2019 ஆம் ஆண்டு இப்பாடசாலையை கா.பொ.த.சாதாரண தரம் வரை தரம் உயர்த்தி அதற்கான வளங்களையும் வழங்கியது.

இந்த நிலையில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையில் குறித்த பாடசாலையை சேர்ந்த 11 மாணவர்கள் தோற்றினர்.

இவர்களில் 07 மாணவர்கள் கா.பொ.த.உயர்தரத்திற்கு தெரிவாகி உள்ளதுடன்,ஒருவர் விஞ்ஞான பிரிவிற்கும்,மேலும் ஒரு மாணவர் கணித பிரிவிற்கும் தெரிவாகியுள்ளமை பாராட்டத்தக்கது.