LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல்!

Share

இயலாமை உடைய நபர்களுக்கான தொழில் ஆதரவை ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சி திட்டத்தின் (ESPD) மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் 09.10.2024அன்றைய தினம் காலை மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்திற்கமைவாக யாழ் மாவட்டத்தில் இதுவரை தொழிலி்ல் இணைப்புச் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்டத்தில் சென்ற வருடம் வழங்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக அடைந்துள்ளமையையும் இவ்வருடத்தில் இலக்கினை அடைவதற்கு மாவட்டத்தில் சமூக சேவைகள் மற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பின் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

மேலும் JICA நிறுவனத்துடன் இணைந்து, 2022- 2025 வரையான காலப்பகுதியில் மாற்றுத்திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்தும் நபர்களின் எண்ணிக்கை 50 என்ற இலக்கினை அடைவதற்கு பங்களிப்பு தெரிவித்ததுடன், இத் திட்டத்திற்குரிய மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட ரீதியாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை உரிய பிரதேச செயலகத்தில் முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து இத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும்ஜப்பான்JICA நிறுவனத்திற்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஜப்பான்JICA திட்ட இணைப்பாளர் திரு. Shimizy Takachi, சமூக சேவைகள் திணைக்களத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர்கள் மாவட்ட மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.