LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நாளை வியாழக்கிழமை நடைபெறுகின்றது!

Share

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைகளத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா 10ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், கிளி.இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையின் திறந்த வெளி அரங்கில் காலை 9.00மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன்
அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஷ் மற்றும் கிளி.இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை அதிபர் சு.சுதாஸ்கரன், கிளி.திருதிருவையாறு கலைக்குரிசில் நாயோகேந்திரநாதன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் கெளரவ விருந்தினர்களாக கலாசாரப் பேரவையின் உப தலைவர் கலாபூஷணம் பொன் தில்லைநாதன் (பூநகரி), கரைச்சிப் பிரதேச செயலக கலாசார பேரவை உறுப்பினர் கலாபூஷணம் தேவராசா தியாகராசா, பச்சிலைப்பள்ளி கலாசாரப் பேரவை உறுப்பினர் கலைக்குரிசில் செல்லையா சுந்தரம்பிள்ளை, கலைக்கிளி ஆ.பாலேஸ்வரன்(காசிமணியம்) – கண்டாவளை ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கலைஞராகவும் பல கலைப்படைப்புக்களை ஆற்றி மறைந்த பூநகரி இரணைமாதாநகர் பகுதியை சேர்ந்த அமரர் கலைநகரி சந்தியா புவனேந்திரனை நினைவுறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

நிகழ்வின் போது கலாசார பேரவையினர் மற்றும் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள், சான்றிதழ் வழங்கல், கலைஞர் கெளரவிப்பு என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.