போலிக் கையொப்பம் வைத்து யாழ்ப்பாணத்தில் பெறுமதிமிக்க காணி மோசடி! புகழ்பெற்ற சட்டத்தரணிகளும் மோசடிக்கு உடந்தை
Share
பு.கஜிந்தன்
ஜேர்மனியில் உள்ள ஒருவரின் போலிக் கையொப்பத்தை வைத்து யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் உள்ள காணி யொன்று மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியலில் ஈடுபாடு கொண்ட இளம் சட்டத்தரணிகள் இருவர் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்றும் அறியப்பட்டுள்ளது
ஜேர்மனியில் உள்ளவர் நாட்டுக்கு வராத காலப்பகுதியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியே இந்தக் காணி மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் வசிப்பவர், யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்களான இருவரைக் கைதுசெய்துள்ளனர். அவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மொன்றின் கல்விசாரா ஊழியராவார்.
இந்த இருவரும் காணி மீதான தமது பொறுப்புகளைத் துறந்துள்ளனர். அவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே மேலும் இருவர் சந்தேகநபர்களாக கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.