LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் மாவட்டத்தில் மரித்த ஆன்மாக்களை நினைவு கூறும் நிகழ்வு- பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Share

கல்லறைகளில் குடும்பத்துடன் உருக்கமுடன் மன்றாடி அஞ்சலி.

(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்)
(3-11-2024)

உலகளாவிய ரீதியில் கத்தோலிக்க திருச்சபையினால் முன்னெடுக்கப்படும் மரித்த விசுவாசிகளின் நினைவு கூர்ந்து நித்திய இழைப்பாற்றிக்காகவும் மோட்ச இராட்சியத்தில் சேர்ந்து கொள்ளவும் சிறப்பாக செபிக்கும் தினம் கடந்த 2ம் திகதி சனிக்கிழமை ஆகும்.

மன்னார் பேசாலை கல்லறை தோட்டத்தில் புனித வெற்றி நாயகி ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் உதவி பங்கு தந்தையர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி. மற்றும் மரித்த விசுவாசிகளின் கல்லறைகள் ஆசிர்வதித்து அர்சிக்கப்பட்டது.

மரித்த விசுவாசிகளின் கல்லறைகளில் உறவினர்கள் நினைவு அஞ்சலி செலுத்தி உருக்கத்துடன் மன்றாடி நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மன்னார் மாவட்ட பகுதிகளில் உள்ள கத்தோலிக்க கல்லறை தோட்டங்களிலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெற்றது.

உலக கத்தோலிக்க திருச்சபை ஒரு சிறப்பான நாளாக நவம்பரம் 2ம் திகதியை முன்னெடுப்பது சுட்டிக் கட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.