LOADING

Type to search

இலங்கை அரசியல்

சைவ சமயத்திற்கு முன்னுரிமை பெறுவதற்காகவே தேர்தலில் போட்டி என்கிறது ஈழ சிவசேனை அமைப்பு

Share

நடராசா லோகதயாளன்

சைவ சமயத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை கோரி சிவ சேனை தொண்டர்கள் சுயேட்சை குழுவாக களமிறங்கியுள்ளதாக ஈழ சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் 17-11-2024 அன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், வரலாற்று தொன்மையான சைவ சமயத்திற்கு முன்னுரிமை அளிக்காமல் புத்த சமயத்திற்கு எவ்வாறு முன்னுரிமை அளிக்கலாம். மதமே இந்த நாட்டை கெடுக்கிறது. புத்த மதத்துக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்காமல் சைவ சமயத்துக்கும் முன்னுரிமை அளிக்கவேண்டும் – என்றார்.

மதமாற்ற தடைச் சட்டம், பசு வதைச் சட்டம் உள்ளிட்ட விடயங்களை அமுல்படுத்தவும் சிவசேனையால் வலியுறுத்தப்பட்டது.

ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் ந.புகன்ஶ்ரீந்திரனை முதன்மை வேட்பாளராக கொண்டு ஆமைச் சின்னத்தில் சிவசேனை அமைப்பு சுயேட்சையாக போட்டியிடுகின்றது.