வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து திருடியவர் விளக்கமறியலில்!
Share

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்பாட்டம் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஒரு தொகை பணம் மற்றும் ஒரு அலைபேசி என்பன களவாடப்பட்டிருந்தன.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்ததுடன் களவாடப்பட்ட அலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை மீட்டனர்.
இந்நிலையில் அவரை நேற்றையதினம் (07) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.