LOADING

Type to search

இலங்கை அரசியல்

“யாழ்ப்பாண இளைஞர்களே! தேசிய மக்கள் சக்தியின் கொடியை ஏந்துங்கள். நாம் இணைந்து தேசிய ஒற்றுமையை வளர்ப்போம்”

Share

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார வேண்டுகோள்

ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் அழைத்தபோது எமது பேரூந்தில் ஏற மறுத்த எவருக்கும் தேர்தலின் பின்பு அமைச்சுப் பதவிக்காக எமது பேரூந்தில் ஏற்ற மாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கா யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பாசையூரில் கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இங்கே ஏனைய கட்சி தலைவர்கள் பலர் என்ன கூறுகின்றனர். தேர்தலின் பின்பு இந்த அரசிலும் அமைச்சுப் பதவி எடுப்பேன் என்கின்றனர். ஆனால் ஜனாதிபதித் தேர்தலிற்கு முன்பு நாம் பலரை அழைத்தபோது பழைய தொடர்புகளை விடமுடியாது எனக்கூறி இரண்டாகப் பிரிந்து நின்று அந்த தலைவர்களின் மேடையில் அலங்கரித்தனர்.

தலைவர்களே நீங்கள் பேரூந்தை தவற விட்டுவிட்டீர்கள். எனவே யாழ்ப்பாண இளைஞர்களே தேசிய மக்கள் சக்தியின் கொடியை ஏந்துங்கள். பேரூந்தை தவற விட்டவர்களிற்கு இனி பேரூந்தில் இடமில்லை. நாம் தேசிய ஒற்றுமையை வளர்ப்போம். வடக்கு மக்களே உங்கள் காணிகளை படிப்படியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று அரசியல் கைதிகளை விடவும் நடவடிக்கை எடுப்போம்.

கிராமிய வறுமையை இல்லாதொழிப்போம். யாழ்ப்பாணம் விவசாயத்திற்கு ஏற்ற வளமான மக்களும் மண்ணும் இந்த யாழில் உண்டு நாட்டின் விவசாய உற்பத்திக்கு நியாயமான விலை கிடைக்கும்.

இதேநேரம் கடற்றொழிலாளர்கள் இன்று உங்கள் கடல் முழுதாக அழித்து சட்ட விரோத நடவடிக்கையில் இந்திய மீனவர்கள் ஈடுபடுகின்றனர். அந்த கடலின் உரிமையை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.
2025 வடக்கில் சுற்றுலாத்துறையானது முதன்மை பெறும்.

இதேநேரம் நாட்டின் அனைத்து மாணவர்களிற்கும் இலவச சீருடை வழங்க சினா உத்தரவாதம் அளித்துள்ளது.

யாழில் போதைவஸ்து, கேரள கஞ்சவிற்கு இரையாகி வருகின்றனர். இதில் இருந்து மீட்டெடுப்போம். போதைக்கு பின்னால் அரசியல்வாதிகளே இருந்தனர். இதை நாம் மாற்றி அமைப்பபோம்.

அடுத்த திட்டம் பொருளாதார திட்டம் இதற்காக பரந்தன் இரசாயன உற்பத்தி நிலையத்தை புதிய கைத் தொழிற்சாலையாக அமைப்போம், சீமேந்து தொழற்சாலை அமைப்போம், புதிய தொழிற்சாலைகள் அமைப்போம்.

இங்குள்ளோர் இந்தியவுடன் ஒரு தொடர்பை கொண்டுள்ளனர். இதன்மூலம்
இலத்திரனியல் இலங்கையை உருவாக்குவோம்.

பழைய ஜனாதிபதியின் காலத்தில்

ஜனாதிபதி செயலகத்தில் 863 வாகனம் இருந்துள்ளது. ஆனால் யாழ்ப்பாணம் மக்கள் பாவனைக்கு இங்கே உள்ள டிப்போவில்கூட அந்தளவு வாகனம் இல்லை. இங்கே வைத்தியசாலையில் நோயாளர் காவுவண்டி இல்லை ஜனாதிபதி வீட்டில் நோயாளர் காவுவண்டி நிற்கின்றது.

சுதந்திரத்திற்குப் பின்னரான 76 வருடம் இந்த நாடு 5 குடும்பங்களின் கையில் இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதியின் மருமகன், ஜனாதிபதியின் மகன், ஜனாதிபதியின் மகன் மற்றும் ஜனாதிபதியின் சித்தப்பா மகன் இவர்களே ஜனாதிபதி வேட்பாளர்களாகினர். ஆனால் மாற்றம் ஏற்பட்டது. அந்த இரு கட்சிக்கும் சவால் விடுகின்றேன் இந்த யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதித் தேர்தலில் இங்கே எடுத்த வாக்கின் பாதியை எடுத்துக் காட்டுங்கள். தற்போது கூறுகின்றனர் 6 மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் என்னை கவிழ்ப்போம் என்கின்றார்கள் ஆனால் நாடாளுமன்றில் மக்கள் உங்களை கவிழ்ப்பார்கள்.

கத்தி, மிளகாய்த்தூள் எல்லாம் நாடாளுமன்றம் கொண்டு வருகின்றார்கள் எல்லாம் சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த நாட்டில் நாடாளுமன்றம் சில காலம் மாணவர்கள் போக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போதும் மிருக காட்சிச்சாலை மூடப்படவில்லை. என்ன நாடு இது.

விசேடமாக இந்தியா கடன் தந்தார்கள் அந்த கடன் தொகையை தற்போது நன்கொடையாக கொடுக்கின்றோம் என்றனர். இதனால் நம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். இந்த யாழை விட்டு, உற்றார் உறவுகளை விட்டு பலர் வெளியேறினர். வடக்கு மக்கள் ஐரோப்பாவில் கல்வியல், ஆராச்சியில், பொருளாதாரத்தில் உள்ளனர் உங்கள் அறிவு யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்ப அழைக்கின்றோம். தாய் நாட்டிற்கு வாருங்கள். வேறுபாடு இல்லாத சமனான அழைக்கின்றோம். தாய் நாட்டிற்கு வாருங்கள். வேறுபாடு இல்லாத சமனான பிரஜையாக நடாத்துவோம்.

இந்த தேரத்தில் கொண்டு வராத அறிவால் , பணத்தால் என்ன பலன் என்றார்