LOADING

Type to search

இலங்கை அரசியல்

உழைப்பால் உயர்ந்தவர் உள்ளத்தினால் கவர்ந்தவர் மறைந்தார் கலைமாமணி வி.கே.டி பாலன்;

Share

“எனக்கு ராமாயணம் தெரியாது, மகாபாரதம் தெரியாது தொட்டுப்பாக்கின்றேன். ஐந்து திருக்குறள்கள்தான் தெரியும். பாரதி கவிதைகள் எனக்குப்பிடிக்கும். சினிமாவில் வந்த பாரதிபாடல்களைத்தான் நான் கேட்டிருக்கின்றேன். நான் சராசரி பாமரன். எட்டாம் வகுப்புக்கு குறைவாகக் கல்வி கற்றவர்களில் ஒருவன். எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரிடமும் நிறையக் கற்றவன். சரியான கல்வியில்லாத எனக்கு அரசியல் மற்றும் இலக்கிய சமூகஅறிவு எனக்கு வந்தது. அதற்குக் காரணம் என் வாடிக்கையாளர்கள்.

திரு.பழ. nடுமாறன், திரு.வை.கோ, திரு.சீமான் போன்ற அரசியல்வாதிகள், பிரபலமாக சினிமா கலைஞர்கள். பின்னணி பாடகர்கள் என்னுடைய நிரந்தர வாடிக்கையாளர்கள் அவர்கள் என்னுடன் அமர்ந்து பேசும்போது தாங்கள் படித்தவற்றை என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள். அவர்கள் மூலம்தான் எனக்கு இலக்கியம் அறிமுகமானது. கவிஞர்கள் மு. மேத்தா, அப்துல் ரஹ்மான்,  நா. முத்துகுமார், வைரமுத்து போன்றவர்களின் நட்பு என்னைக் கவிதை இலக்கியப் பொக்கிஷத்தை ரசிக்க வைத்தது.”

தமிழகத்தின் தலைசிறந்த அரசியல்வாதிகளும், இலக்கியவாதிகளும் எனக்குச் செவிவழியாகத் தமிழ் பிச்சை போட்டிருக்கின்றார்கள். மரபின் மைந்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘நம்பிக்கை’ பெப்ரவரி 2019 இதழில் இடம்பெற்ற நேர்காணல் தொகுப்பில் மேற்கண்டவாறு இடம் பெற்றிருந்த சில பகுதிகள் கனடிய வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளேன்.

1996 மார்ச் மாதம் சென்னைப்பட்டினம் சென்றவேளை அருமை நண்பர். உங்கள் அறிவிப்பாளர் திரு.பி.எச். அப்துல் அமீது அவர்களால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட உள்ளம் கவர் தோழர்தான் கலைமாமணி வி.கே.டி பாலன் அவர்கள். கால் நூற்றாண்டு காலமாக எங்கள் இருவருக்கும்மான நட்பு இறுகப் பற்ற நெருக்கமாக நிலைத்துவிட்டது. வாழ்க்கையில் நான் சந்தித்திராத சிலகசப்பான அநுபவங்களை பாலனுடைய அநுபவங்கள் மூலம்தான் நானும் அறிந்து கொண்டேன். ‘உழைக்கத்துணிந்தால் உலகம் உதவும்’ என்று தனது வாழ்க்கையில் ஏறிய ஏணிப்படிகளை என்றும் நினைவு கூர்ந்து மனம் திறப்பார்.

தந்தையின் மறைவிற்க்குப்பின் பிறந்த பதியாகிய திருச்செந்தூரிலிருந்து சென்னை நகருக்கு வந்தவரை- அமெரிக்கன் தூதுவராலய பிளட்போம் தூக்கிவைத்தது. காலையில் கண் விழித்தபோதுதான் படுத்திருந்த இடத்துக்காக விசா எடுக்க வந்த பயணி ஒருவர் இரண்டு ரூபாய் கொடுத்தாராம். அன்றிலிருந்து அமெரிக்கன் விசா வாங்க வரிசையில் நிற்போருக்கு இடம் பிடித்துகொடுக்து பல இரண்டு ரூபாய்களைச் சம்பாதித்தவருக்கு உலகில் பறக்கும் அனைத்து விமானங்களுக்கும் பணயச்சீட்டு விற்பனையாளராக அவருடைய சொந்த நிறுவனமான மதுரா ரவல்ஸ் நிறுவனம் சென்னை எக்மோரில் பரபரப்பாக இயங்கி வருகிறது. பயணத்துறை சார்ந்து இருக்கிற அனைத்து அமைப்புக்களினதும் உறுப்பினராக மதுரா இருக்கிறது. சங்கத்தின் தலைவராகவும் அவராகவே உயர்ந்துள்ளார்.

1981ல் சென்னiயின் பிரபல ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காகச் சென்றவேளை உணவக நிர்வாகம் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தது. காரணம் அவரது எளிமையான தோற்றம். காலில் அணிந்திருந்த ரப்பர் செருப்பு.

2001ல் அதே ஹோட்டல் நிர்வாகிகள் அவர் பயணித்த அம்பாஸிடர் காரின் கதவை திறந்துவிட்டனர். 12க்கு மேலானவர்கள் கையில் பூக்கொத்துடன் வரவேற்றனர். உங்கள் வரவு நல்வரவாகுக! ஆங்கில மொழியில் வரவேற்புக்கூறினர். அனால் எனது காலில் இப்போதும் பாட்டா சிலிப்பர்தான். அதே கதர் வேட்டி-சட்டை தோளில் துண்டு, நெற்றியில் குங்குமம்.

இப்போது அவர் மறையும் போது துறை திணைக்களத்தின் உயரதிகாரியாகவும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் அந்தஸ்த்தைப் புதுப்பிக்கும் கையெழுத்துக்குரியவராகவும் உழைப்பால் உயர்ந்தவர், மனிதநேய மாணிக்கம் எனது தோழர் மதுரா பாலன் அவர்கள். சென்னை செல்லும் போதெல்லாம் வாருங்கள் கவிஞரே , வீணை மைந்தரே என வாய் நிறைய அழைத்துக் கட்டியணைப்பார். தான் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளுக்கு என்னையும் கூடவே அழைத்துச் செல்வதோடு, மேடையில் அமர வைப்பார். வி.ஐ பி யினருக்கு அறிமுகம் செய்து வைப்பார். என்னுடைய கனடிய நண்பர், எழுத்தாளர் என்று பெருமிதம் கொள்வார். சென்னையில் எனக்கிருந்த அன்புத் தோழரின் இழப்பு ஈடுசெய்ய முடியாது.

-வீணை மைந்தன் – கனடா