வடமாகாண மக்கள் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாது, இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு விசேடமாக நன்றி தெரிவிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் 15ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “விகிதாசாரத் தேர்தலின் கீழ் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் அரசியல் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், வெற்றிக்காகத் தியாகம் செய்தவர்களுக்கு அனைவருக்கும் நன்றிகள். விசேடமாக பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாத வடமாகாண மக்கள், இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு நன்றிகளை தெரவித்துக்கொள்கிறேன். அத்துடன் இலங்கை வரலாற்றில் முதலாளித்துவ போக்குக் கொண்ட ஊழல் அரசியல்வாதிகளை புறந்தள்ளி மக்கள் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கிய இலங்கை மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இந்த கருத்துக்களையே தமது ஜனாதிபதி அநுரகுமாரவும் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
Share
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது.
160 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 196 பேர் நேரடியாகவும் 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட உள்ளதுடன், 17.1 மில்லியன் மக்கள் இம்முறை வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா (Nuwara Eliya), பதுளை (Badulla), இரத்தினபுரி (Ratnapura) ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏழு மலையகத் தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிஷ்ணன் கலைச்செல்வி 33346 வாக்குளை பெற்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்ப்பில் ஜீவன் தொண்டமான் 46,438 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பழனி திகாம்பரம் 48018 வாக்குளை பெற்றும், வே.இராதாகிருஷ்ணன் 42,273 வாக்குகளை பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிட்ணன் செல்வராஜ் 60041 வாக்குளை பெற்றும் அம்பிகா சாமுவேல் 58201 வாக்குகளை பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
அதுபோன்று இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சுந்தரலிங்கம் பிரதீப்பும், மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சரோஜா போல்ராஜும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.
தேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள ராமலிங்கம் சந்திரசேகரனும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினால் மொத்தமாக 8 மலையக எம்.பிகள் இம்முறை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவர்.