தெற்கைத் தளமாகக் கொண்ட கட்சி ஒன்றிற்கு வட பகுதி மக்கள் இவ்வளவு முதன்மையாக வாக்களித்துள்ளதை தேவையான ‘மாற்றம்’ என குறிப்பிட்ட இலங்கைக்கான சீனத் தூதுவர்
Share
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிப்பு
ந.லோகதயாளன்.
வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற எம் சகோதர சகோதரிகளின் வாழ்வியல் முறை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்வதே எனது வருகையின் நோக்கமாகும் .தேசிய மக்கள் சக்தியின் வரலாற்றிலேயே தெற்கை மையப்படுத்திய கட்சி ஒன்றிற்கு முதன் முதலாக வடக்கு மக்கள் இவ்வளவு முதன்மையாக வாக்களித்துள்ளனர் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ சென்கொங் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் 18-11-2024 அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சீனத் தூதுவர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், நான் பருத்தித்துறை முனைக்கு சென்றிருந்தேன் .அங்கு ஓர் வாக்கியம் எழுதப்பட்டிருந்தது. பண்மைத்துவத்தில் ஒற்றுமையினை நிலைநாட்டுதல் என எழுதப்பட்டது .கடந்த நடாளுமன்ற தேர்தலில் அது இயல்பாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
யாழ்பாணத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் நான் இங்கே வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நான் கொவிட் 19 காலப்பகுதியில் தான் முதன் முதலாக வடக்கிற்கு வருகை தந்தேன் .அப்பொழுது இருந்த அரசாங்கத்தினை முழுமையாக சினோபாம் தடுப்பூசியினை வழங்குமாறு வலியுறுத்தினோம்.வடக்கு கிழக்கில் 1.5 பில்லியன் ரூபாய் செலவில் நீர் சுத்திகரிப்பு கருவிகள்,
கடல் தொழிலாளர்களுக்கான வலை ,உலர் உணவு பொதி ,அரிசி ஆகிய திட்டங்களிற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். மேலும் மீன்பிடிவலை வீட்டு திட்டங்கள் வழங்க ஆரம்பிக்கழட்டுள்ளன ஏனைய திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
இதனடிப்படையில் 1லட்சத்து 20 ஆயிரத்து எழுநூற்று 60 குடுமங்களுக்கு 1630 மெற்றிக் தொன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.75 ஆயிரம் வலைகள் 14 ஆயிரத்து 936 கடற்றொழிலாளர்களுக்கும் ,500 குடும்பங்களுக்கு 500 வீடுகளும் வழங்கப்பட்டுவருகின்றது.
இலங்கை சீனாவிடையே பாரம்பரிய நட்பு உள்ளது இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும் சீனா இலங்கையுடன் இருக்கும் என்றார் சீனத்தூதுவர் .