LOADING

Type to search

கனடா அரசியல்

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா புதிய நிர்வாக சபை (2024-2025)

Share

கனடாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஆரம்ப காலத்தில் தோன்றிய ஊர்ச் சங்கங்களில் ஒன்று எனும் பெருமையை தனதாக்கிக்கொண்ட நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா தனது முப்பதாவது ஆண்டில் கால்பதிக்கின்றது. கனடியமண்ணிலும், ஈழத்திலும் பல சமூகப்பணிகளையும், மக்கள் நலப்பணிகளையும் ஆற்றிவரும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் 21வது நிர்வாக சபைக்கான தெரிவுக்கூட்டம் கடந்த ஞாயிறுக்கிழமை நவம்பர் 10, 2024 அன்று கனடா தமிழ்க்கல்லூரி மண்டபத்தில் மண்டபம் நிறைந்த ஆயுட்கால பொதுச்சபை உறுப்பினர்கள் முன்னிலையில் நடாத்தப்பட்டது.

ஏக மனதான தெரிவின் போது 6 நிறைவேற்று நிர்வாக உறுப்பினர்களும், 9 நிர்வாக உறுப்பினர்களுமாக மொத்தம் 15 பேரும், போஷகர் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டார்கள். நிரந்தர இயக்குனர் சபை உறுப்பினர் மூவரும் இந்த புதிய நிர்வாகத்தை வழிநடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தெரிவைத் தொடர்ந்து புதிய தலைவர் உட்பட புதிய நிர்வாகசபை உறுப்பினர்களின் முதல் உரைகள் நடைபெற்று நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட 21வது நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, எம் நெடுந்தீவு உறவுகளுக்கும், நலன் விரும்பிகளுக்கும் அறியத் தருகிறோம்.

தலைவர்
திரு. இராஜராஜன் சுப்பிரமணியம்

செயலாளர்
திரு. ஜெயப்பிரகாசன்(ஜெயா) குமாரசுவாமி

பொருளாளர்
திருமதி. பங்கயற்செல்வி சிவகுமாரன்

உப-தலைவர்
திரு. செல்வரவீந்திரன் தர்மலிங்கம்

உப-செயலாளர்
திருமதி. மனோகரி நாகமுத்து

உப-பொருளாளர்
திரு. சேரன் ஆறுமுகம்

நிர்வாக சபை உறுப்பினர்கள்

திரு. டொனால்ட் ஜெயரட்ணம்

திரு. மரியதாஸ் மரியாம்பிள்ளை

திரு. சர்வானந்தன் காங்கேசு

திரு. செல்வன் K.V

திரு. சிவா பேரம்பலம்

திரு. றதன் ரவீந்திரநாதன்

திருமதி. கேதீஸ்வரி மோகன் மதி

திருமதி. ஜெபா ஸ்ரீ

திருமதி. மதி கணேஷ்

போஷகர்
திரு. முருகதாஸ் அமிர்தரட்ணராஜா

கணக்காய்வாளர்
திரு. பரம் கந்தையா

இயக்குனர் சபை
திரு. பேரின்பநாதன் ஆறுமுகம்
திருமதி. ஜேம்ஸ் சரஸ்வதி -திரு. ஈசன் குலசேகரம்