LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பு கிருமிச்சை கிராமத்துக்கு குடிநீர்த் திட்டம் கையளிப்பு வழங்கும் வைபவம்

Share

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை கிராம மக்களின் அடிப்படை தேவையான சமூகத்திற்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் எனும் தொனிப் பொருளில் குடிநீர் வழங்கும் திட்டத்தில் வன்னி ஹோப்பை அமைப்பு வேள்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தினை கடந்த 18 ம் திகதி திங்கட்கிழமை மக்கள் பாவனைக்காக கையளித்தனர்.

குறித்த பிரதேசத்தில் கடந்த காலத்தில் குடிநீரை பெறுவதில் பல்வேறு அசௌகரியங்களை மேற்கொண்டுவந்த அடிப்படை பிரச்சனையான குடிநீரை வழங்க கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய சமூக நீர் வளங்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலே பிரஜா ஜல அபிமான வேலை திட்டத்தின் கீழ் இந்த குடிநீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மக்களினுடைய பங்களிப்பு போதாத நிலையில் இடைநடுவில் சில குறைபாடுகள் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டிருந்தது

இதனையடுத்து இத்திட்டத்தை பூர்த்தி செய்து மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்பதற்கு வன்னி ஹோப்பை நிறுவனத்தின் 25 இலச்சம் ரூபா நிதி அனுசரணையுடன் வேள்ட் விஷன் லங்கா நிறுவனம் முன்வந்தது இந்த திட்டதை நிறைவு செய்து மக்களிடம் கையளிக்கும் நிழக்வு கடந்த 18 ம் திகதி இடம்பெற்றது

இதில் அதிதிகளாக வன்னி ஹோப்பை அமைப்பின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சன் சிவஞானசுந்தரம், வைத்தியர் அரன் ஸ்ரீPதரன், வேள்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் முகாமையாளர் ரவீந்திரன், சலோமிக்கா செல்வராஜா. கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான கணவதிப்பிள்ளை தவசீலன். திட்ட இணைப்பாளர் தனுராஜ் தேசிய சமூக நீர் வளங்கள் திணைக்கள பொறியளார் எஸ்.பிரதீபன். நிலைய பொறுப்பதிகாரி சுலக்சனா. அபிவிருத்தி உத்தியோகத்தர் தேவராஜன். தொழில்நுட்ப உத்தியோகத்தர் கபிசாந்தன் ஆகியேர் கலந்து கொண்டனர்

இதனையடுத்து நிர்மானிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் திட்டத்தை சம்பிராய பூர்வமாக அதிதிகள் நாடாவெட்டி மக்களின் பாவனைக்காக வழங்கிவைத்தனர்