LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவிடம் ஜனநாயக போராளிகள் கட்சி விடுத்த கோரிக்கை!

Share

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை ஐக்கியப்படுத்தப் போவதாக தெரிவித்து பதவிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அவர்கள் நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் வெளியேறி உறவுகள் நினைவுகூர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.

23ம் திகதி சனிக்கிழமையன்று அவர் பருத்தித்துறை பகுதியில் ஊடகங்களுக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போவதாக பதவி ஏற்ற அனுர குமார திசநாயக்க நல்லிணக்கத்தின் முதலாவது நிகழ்வாக மாவீரர் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதியளிக்கவேண்டும் என்றும் , மாவீரர் துயிலில் இல்ல காணிகளிலிருந்தும் இராணுவம் வெளியேற நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.